இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலையில் மீண்டும் அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றுமுதல் இந்த விலையதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி லிட்ரோ 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4,910 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 5 கிலோகிராம் மற்றும் 2.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்பதுடன் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எச்சரிக்கை! - வருகிறது இலங்கைக்க அபத்து!!
சிறப்புத் தேவையுடையவர்களுக்கான மலசலகூடங்கள் அமைப்பது தொடர்பான இருவார ஆய்வு!
மாவட்ட நிலையில் முதல் இடம் பெற்ற வஜினாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கி...
|
|