இன்றுடன் மழை குறையுமாம்?
Thursday, May 19th, 2016
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த அசாதாரண காலநிலை இன்றுடன் வழமைக்குத் திரும்பி, மழையின் தீவிரம் தணியும் வாய்ப்பிருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இலங்கையின் வான்பரப்பில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் முற்றாக அகன்று அதன் பாதிப்புகளும் இன்றுடன் தணியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் வானிலையில் சடுதியான மாற்றத்தை எதிர்பார்க்க முடியாத நிலையில் தொடர்ந்தும் சில நாட்களுக்கு இடைக்கிடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இது அடைமழையாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் காற்றின் தீவிரம் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
Related posts:
கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை !
எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் சிறுவர்களை நெருங்கும் ஆபத்து - லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை ...
மலையக பெருந்தோட்ட மக்களின் சார்பில் 15 பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் உள் வாங்கப்பட வேண்டும் - கல்வி...
|
|
|


