இன்புளுயன்சா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

Tuesday, October 18th, 2016

இன்புளுயன்சா வைரஸ் பரவலை கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் கட்டுப்படுத்துவதற்கு முடிந்துள்ளதாக தேசிய இன்புளுயன்சா நிலையம் தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 500 இன்புளுயன்சா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தில் வைரஸ் நோய்கள் தொடர்பான விசேட நிபுணர் டொக்டர் ஜூட் ஜயமக குறிப்பிட்டார்.

கடந்த வருடத்தில் சுமார் 1600 இன்புளுயன்சா நோயாளர்கள் பதிவாகியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் இன்புளுயன்சா தொற்றுநோயாக பரவியிருந்தபோதிலும், இந்தவருடம் வெகுவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆயினும், டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களிலேயே இந்த வைரஸ் தாக்கம் அதிகளவில் ஏற்படுவதாக வைரஸ் நோய்கள் தொடர்பான விசேட நிபுணர் கூறினார்.கடந்த 8 வருடங்களாக மேற்கொண்ட ஆய்வுகளின் பிரகாரம் இன்புளுயன்சா வைரஸ் பரவும் தன்மை மாதா மாதம் வேறுபடுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Influenza-626x380

Related posts:

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் PCR பரிசோதனை - இன்றுமுதல் ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ...
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுங்கள் - ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அத...
இந்தியாவுடனான உறவு இலங்கைக்கு அத்தியாவசியம் – ஜி.எஸ்.பி. பிளஸ் விடயத்திலும் சிக்கல் வராது – அமைச்சர்...