இந்திராகாந்தியும், எம்.ஜீ.ஆரும் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக கே.பி தகவல்!
Wednesday, May 24th, 2017
இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோவினை, விடுதலைப் புலிகளுக்கு உதவிசெய்யுமாறு, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உத்தரவிட்டதாக கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ரோ உளவுப்பிரிவானது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளை முன்னெடுக்கும் படி, இந்திராகாந்தியினால் உத்தரவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இலங்கையில் இயங்கிய பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும், இந்திராகாந்தி உதவியளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்
அதேநேரம், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜீ.ஆர். எனப்படும் எம்.ஜீ.ராமசந்திரன் அதிக அளவான நிதியை வழங்கியுள்ளதாகவும் கே.பி கூறியுள்ளார் இந்த நிதியின் ஊடாகவே அதிக ஆயுதங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு..!!
இலங்கையில் வைத்து சீன பிரஜை ஒருவர் கைது!
மழையுடனான வானிலை நாளைவரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


