இந்திய மத்திய வங்கியிடம் 100 கோடி பெறப்பேச்சு!

Saturday, January 19th, 2019

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு இந்தியாவின் மத்திய வங்கியிடம் இருந்து ஒரு பில்லியன் (100கோடி) டொலரை நாணயப் பரிமாற்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான பேச்சில் ஈடுபட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள் மற்றும் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ஆட்சிக் குழப்பங்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்புக்களைச் சமாளிக்க இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் உதவி கோரியுள்ளது.

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியிடமிருந்து நாணயப் பரிமாற்றங்களின் மூலமாக 400 மில்லியன் டொலரைப் பெற்றுக்கொள்ள  இலங்கை அரசு ஏற்கனவே பேச்சு நடத்தியிருந்தது. இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியிடமிருந்து ஆயிரம் மில்லியன் டொலரை நாணயப் பரிமாற்றங்களின் மூலமாகப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: