இந்திய உந்துருளிகளின் விலையில் மாற்றம் ஏற்படாது – வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்!

Friday, August 18th, 2017

அரசாங்கத்தால் 150 சிசிக்கும் குறைந்த இயந்திர வலுவுடைய உந்துருளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 90 சதவீத வரி அகற்றப்பட்டுள்ள போதும் , இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உந்துருளிகளின் விலையில் மாற்றம் ஏற்படாது என லங்கா வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஹிரு செய்திப்பிரிவிற்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே இதனை தெரிவித்திருந்தார்.இந்த வரிகுறைப்பின் மூலம் ,ஜப்பானின் உந்துருளிகள் பாரியளவில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: