இந்தியர்கள்  ஐ.எஸ் இல் இணைந்து கொள்வதற்கான பாதையாக யாழ்ப்பாணம்?

Friday, August 12th, 2016

இந்தியாவில் உள்ளவர்கள்  ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கொள்வதற்கான பாதையாக யாழ்ப்பாணம் மாறி வருவதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்வதற்கு பங்களாதேஸ் அல்லது துபாய் ஊடான பாதையை பயன்படுத்த முடியும். எனினும் அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தமது கண்காணிப்பை அதிகரித்துள்ள நிலையில், புதிய வழியாக யாழ்ப்பாணத்தின் ஊடாக ஆப்கானிஸ்தான் செல்ல முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இந்தியர்கள் இணைவது தொடர்பான விசாரணை மும்பாயின் புலனாய்வு பிரிவினருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மும்பையின் பொலிஸ் குழு ஒன்று விரைவில் கேரளாவுக்கு சென்று கலாநிதி சாகிர் நைய்க்கின் இரண்டு ஆதரவாளர்கள், இளைஞர்களை தீவிரவாதத்துக்கு உட்படுத்துவது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளது.

விசாரணையின் போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், குறித்த இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இந்திய அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளனர்.

கேரளாவின் இஸ்லாமிய ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரான நைய்க், அவரின் விருந்தினர் தொடர்புகள் முகாமையாளர் ஆர்சிக்குரேசி, ரிஸ்வான் கான் மற்றும் ஒருவர் மீது கேரளாவின் பொலிஸார் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

ஏற்கனவே கேரளாவில் இருந்து 21 இளைஞர்கள், கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் இலங்கை ஊடாக ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இதேவேளை, கேரளா பொலிஸாரின் உதவியுடன் நைய்க்கின் ஆதரவாளர் என்று கூறப்படும் ஒருவரை, மகாராஸ்டிரா பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். அவரின் தகவல்களும் மும்பாய் பொலிஸாருடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: