இந்தியப் பிரஜை யாழ்ப்பாணத்தில் கைது!

Friday, November 25th, 2016

சுற்றுலா விசாவில் இந்தியாவிலிருந்து யாழ். மாவட்டத்திற்கு வருகை தந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்தியப் பிரஜையொருவர் யாழ். குருநகர் பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை(24) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து 43 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடமிருந்து ஒரு தொகை துணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.  சந்தேகநபரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

arrest_07

Related posts:


மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு பொலிஸ் பிணை இல்லை - பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக...
உரங்களை பற்றாக்குறையின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை!
யாழ் மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளது - மாவட்ட செயலாளர் அம்பலவாணர்...