இந்தியன் வீடமைப்புத் திட்டத்தை விஸ்தரிக்கக் கோரி மெளன விரதம்!
Sunday, May 15th, 2016
இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் கேகாலை, கண்டி, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்ட தோட்ட மக்களுக்கும் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கக்கோரி பிரார்த்தனை மற்றும் மெளன விரதம் என்பன கொழும்பில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
செளமிய இளைஞர் நிதியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி சென்.மைக்கல்ஸ் வீதியிலுள்ள இளந்தோப்பு சக்தி அம்மன் ஆலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஆலயத்தின் பிரதம குரு ஸ்ரீதரன் குருக்களால் பூஜைகள் நடத்தப்படவுள்ளதுடன் செளமிய இளைஞர் நிதியத் தலைவர் பி.அந்தோனி முத்துவினால் மெனளவிரதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மகஜர் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்கா மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு கையளிக்கப்படவுள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் பலாப்பழத்துக்கு குறைந்தது மவுசு!
சாவகச்சேரியில் 72 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!
விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கம் ஆரம்பிக்கும் – அமைச்சர் சுசில...
|
|
|


