இணைவழி கற்றலில் ஈடுபட வசதிகளற்ற மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் புதிய திட்டம் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் அறிவிப்பு!

இணையவழி கற்றலில் ஈடுபடுவதற்கான வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, நாடுமுழுவதும் 2 ஆயிரத்து 96 மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் மேலும் தெரிவிக்கையில்-
இணையத்தள வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு கற்றலில் ஈடுபடுவதில் பிரச்சினைகள் உள்ளன.
இந்நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் உதவியுடன், நாடுமுழுவதும் 2 ஆயிரத்து 96 மத்திய நிலையங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இதற்காக பாடசாலைகள், விகாரைகள், பொதுநோக்கு மண்டபங்கள் என்பன தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கான கணினி மற்றும் இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், 14 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ள இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|