வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை அமெரிக்கா விஜயம் – நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வு!

Monday, November 28th, 2022

வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதனடிப்படையில் அவர் நாளையதினம் (29) அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சரின் கவனம் இங்கு ஈர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: