இணைய பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Sunday, December 11th, 2016

2017 ஆம் அண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இணைய சேவைக்கான வரி மீண்டும் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் பேராசியரியர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல், டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின் போதே பிரதி அமைச்சர் இந்தத் தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் தொடர்பில் நிதி அமைச்சினால் அவதானம் செலுத்தப்படும் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாட்டின் மத்திய மலைநாட்டின் விவசாயிகள் முதல் அனைத்து தரப்பினரும் தங்களின் செயற்பாட்டினை வேகப்படுத்திக் கொள்வதற்காக இணையத்தள வசதிகளை பெற்றுக் கொள்கின்றார்கள்.

இன்னும் ஒரு பக்கத்தில் இணையத்தளத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை அதிகரித்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில் இணையத்தளத்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதனை என்னால் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த வரியினை குறுகிய காலத்திற்கு மாத்திரமே நிதி அமைச்சர் அதிகரித்திருப்பார் என நான் நம்புகின்றேன். வெகு விரைவில் அந்த வரி குறைக்கப்படும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்பதனை இங்கு கூறிக் கொள்கின்றேன் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

151217052104_facebook_640x360_thinkstock

Related posts: