ஆவா குறித்து விஷேட விசாரணை!
Tuesday, October 25th, 2016
“ஆவா” என்ற இயக்கத்தின் ஊடாக யாழ்ப்பாண பிரதேசத்தில் விநியோகம் செய்யப்படுகின்ற துண்டுப்பிரசுரம் தொடர்பில் வடக்கு பாதுகாப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், சுண்ணாகம் பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஆவா என்ற தமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டதாக அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரம் யாழ்ப்பாணம் நகரம் பூராகவும் பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரத்தின் இறுதியில் “ஆவா” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு கூறியுள்ளது. இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாட்டின் படி விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
யாழ் மாவட்ட வாக்காளர் தொகையில் சரிவு - நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு!
யாழ்ப்பாணம் வருகைதரும் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க!
அதிக நீர் வருகை - திறக்கப்பட்டது இரணைமடு குளத்தின் 12 வான் கதவுகள்!
|
|
|


