ஆர்ப்பாட்டங்களில் அப்பாவி மாணவர்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே பங்கு கொள்கின்றனர்!

Sunday, June 25th, 2017

ஆர்ப்பாட்டங்களில் அப்பாவி மாணவர்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே பங்கு கொள்வதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய மருத்துவத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குத் தேவை திரிபுபடுத்தப்பட்ட சமூகம் அல்ல. மனித நேயத்தைக் கொண்ட சமூகமே அவசியமாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மருத்துவக் கல்வியை முன்னெடுக்கும்பொழுது இலவசக் கல்விக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் வலியுறுத்தினார். தற்பொழுது மருத்துவ சபை அரசியல் மயப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

2009ஆம்ஆண்டில் இருந்து வைத்திய கல்வி தொடர்பில் தரம் ஒன்று இருக்கவில்லை. இதற்காக தரத்தை அறிமுகப்படுத்துவதற்கு தாம் நடவடிக்கையை மேற்கொண்டதாக அமைச்சர் கூறினார். வைத்தியத் துறைக் கல்விக்காக தரத்தை ஏற்படுத்துவதினால் பிரச்சினைகள் ஏற்படாது என்று அன்றைய அரசாங்கத்தில் வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts: