ஆயுதங்களுடன் வீடு புகுந்து மூளாய் பகுதியில் 17 பவுண் நகை கொள்ளை !

யாழ்ப்பாணத்தில் வாள் , கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், மூளாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த 2 கொள்ளையர்களே இவ்வாறு நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது, “வாள் , கோடரி உள்ளிட்டவற்றுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று முகங்களை மறைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்து எம்மை அச்சுறுத்தி 17 பவுண் நகைகளையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்” என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்நாட்டு விவசாயிகளை வளப்படுத்தியுள்ளேன் – ஜனாதிபதி கோட்டபஜ ராஜபக்ச பெருமிதம்!
அரசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!
பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருகிறது - அதற்கு உறுதுணையாக இருப்போம் என இந்திய வெள...
|
|