ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் எதுவித சந்தேகமுமில்லை!
Tuesday, October 18th, 2016
இலண்டனில் உயிரிழந்த, ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் எவ்வித சந்தேகமுமில்லை என ஸ்கொட்லாந் யாட் பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகனும் சட்டத்தரணியுமான ஆதில் பாக்கீர் மாக்கார்(25), இலண்டனில் கடந்த புதனன்று(12) காலமானார்.
இவர், பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானத்துக்கான இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்பாய்வு அரசியற்றுறையில் முதுமானிக் கற்கைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே காலமாகியுள்ளார். சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அவர், தான் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
முடிவுக்கு வருமா சைட்டம் பிரச்சினை !
முகநூலில் வெளியாகும் போலி கருத்துக்களை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை!
கடத்தல்காரர்களே அரசாங்கத்தை மாற்ற முயற்சிக்கின்றார்கள் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!
|
|
|


