ஆண்டு இறுதிவரை பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

இந்த ஆண்டின் இறுதி வரை அத்தியாவசியமற்ற பயணங்களை கட்டுப்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
அன்றாடம் சுமார் 700 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருவதாகவும், எனவே இது போன்ற சூழ்நிலைகளில், அத்தியாவசியமற்ற பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேநேரம் உறவினர்களைப் பார்க்கவோ அல்லது சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுவதற்கோ இது ஏற்ற காலம் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர் நாட்டில் வழமையான செயற்பாடுகளை படிப்படியாக முன்னெடுப்பதற்காக புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த வழிகாட்டுதல்களுக்கு அமைய செயற்பட்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுயள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
அரசியல் சீர்திருத்தத்திற்கு ஜனாதிபதி இணங்கப்போவதில்லை - அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க!
கலப்பு நீதிமன்றம் இலங்கைக்கு பொருத்தமற்றது - பிரதமர் ரணில் விக்ரமசிங்க!
தேர்தல் கால கூட்டுக்களால் மக்களுக்கு உருப்படியான எதுவும் கிடைக்கப்போவதில்லை – தோழர் ஸ்டாலின்!
|
|