ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆள்சேர்ப்பு!

Thursday, February 9th, 2017

வன்னியில் உள்ள கல்வி வலயங்களில் கணிதம், விஞ்ஞானம், மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு அதிகளவான ஆசிரிய வெற்றிடங்கள் உள்ளன. ஆள்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளன.

கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கணித பாடத்திற்கு 14 வெற்றிடங்களும், முல்லைத்தீவு வலயத்தில் கணித பாடத்திற்கு 19 வெற்றிடங்களும், மன்னாரில் 30 வெற்றிடங்களும், வவுனியா வடக்கில் 24 வெற்றிடங்களும் உள்ளன. விஞ்ஞான பாடத்திற்கு கிளிநொச்சி கல்வி வலயத்தில் 26 வெற்றிடங்களும், முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 30 வெற்றிடங்களும், துணுக்காய் கல்வி வலயத்தில் 20 வெற்றிடங்களும், மன்னார் கல்வி வலயத்தில் 31 வெற்றிடங்களும், வவுனியா வடக்கில் 234 வெற்றிடங்களும் உள்ளன.

பொறியியல் தொழில்நுட்பப் பாடத்திற்கு மன்னார் கல்வி வலயத்தில் 3 வெற்றிடங்களும் மடுவில் 2 வெற்றிடங்களும் வவுனியா வடக்கில் 3 வெற்றிடங்களும் காணப்படுகின்றன. வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பு-1(அ) தரப் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆள் சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை தமிழ் மொழி மூலம் நடைபெறவுள்ளது. விண்ணப்பங்களின் இறுதித் திகதி எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

student

Related posts: