ஆசிரியையின் கோபத்தால் தீக்கிரையானது புத்தகங்கள்!

தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவனின் பாடப் புத்தகங்களை பாடசாலையில் வைத்து ஆசிரியை ஒருவர் தீக்கிரையாக்கியுள்ளார்.
வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புதிய வகுப்பறைக்கு இடம் மாறிச் சென்ற தினத்தில் மாணவன் பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லை. ஆசிரியை மாணவன் பாடசாலையில் விட்டுச் சென்ற புத்தகங்களைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.
மேற்படி ஆசிரியை நடத்திய தனியார் புலமைப்பரிசில் வகுப்பிற்கு மாணவன் சமூகமளிக்காத கோபத்தினால் ஆசிரியை இவ்வாறு செய்துள்ளதாக மாணவனின் பெற்றோர் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.
ஆசிரியையின் தனியார் வகுப்பில் கல்வி கற்காத 21 மாணவர்களைப் பல்வேறு வழிகளில் இந்த ஆசிரியை துன்புறுத்தியுள்ளதாகவும் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
Related posts:
தென்னைச் செய்கையாளர்களுக்கு மானியக் கொடுப்பனவு வழங்கல்!
வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி – பதவி இழக்கும் நிலையில் தவிசாளர்!
2 வயது குழந்தைகளை கொண்ட தாய்மார்ளுக்கு வெளிநாட்டு தொழில் இல்லை – வெளியானது புதிய சுற்றறிக்கை!
|
|