ஆசிய அபிவிருத்தி வங்கி பங்குச் சந்தையில் முதலீடு!
Sunday, November 27th, 2016
நாட்டின் பங்குச் சந்தையின் மேம்பாட்டிற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் சார்பாக நிதியமைச்சின் செயலாளரும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பாக இலங்கைக்கான வதிவிட தூதுவர் குழுவின் பணிப்பாளரும் நிதி முதலீடு தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளங்கல் நிதியத்திலிருந்து குறித்த நிதியை வழங்கவுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பங்குச்சந்தையை நாட்டின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் திறம்பட செயற்படுத்துவதே குறித்த பங்குச்சந்தை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது

Related posts:
கொரோனா தொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் தென்படவில்லை - அரசாங்க மருத்துவ அதிக...
பண்டிகைக் காலங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை மட்டுப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை!
ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - புடின் அதிரடி அறிவிப்பு!
|
|
|


