அலுவலர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி!
Saturday, August 4th, 2018
அரச திணைக்கள அலுவலகங்களில் கடமையாற்றும் ஆரம்ப பகுதி அலுவலர்கள் தமது அடுத்த பதவி உயர்வுக்கு அரச கருமமொழி சித்தியடைய வேண்டியது அவசியமில்லை என்பதுடன் நிறுவன மட்டத்தில் நடத்தப்படும் 50 மணித்தியால சிங்கள மொழிப் பயிற்சி ஒன்றில் பங்குபற்றுதல் போதுமானது என்பதற்கு அமைய கல்வி அமைச்சின் கீழ் இயங்கிவரும் மும்மொழிக் கற்கை நிலையத்தின் மூலம் இப் பயிற்சி நெறியினை வார நாள்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பிற்பகல் 2 மணி தொடக்கம் 4 மணி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இப் பயிற்சி நெறியில் பங்குபற்ற விரும்பும் ஆரம்ப வகுதி அலுவலர்கள் விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து இன்று மும்மொழிக் கற்கை நிலையம் மெதடிஸ்த மி~ன் தமிழ்க் கலவன் பாடசாலை இராமநாதன் சாலை கலட்டி யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


