இரண்டு மாதங்களில் கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும்!

Thursday, August 17th, 2017

கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

அவர் மெலும் தெரிவிக்கையில் – எதிர்வரும் காலங்கள் எங்களை மீண்டும் துரத்துகின்றது. கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படும். அதிலே பல மாற்றங்கள் செய்ய வேண்டி ஏற்படும்.

இந்த கிழக்கு மாகாணத்தினுடைய காலகட்டத்தில் கல்வி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக கிழக்கு மாகாணத்துடைய கல்வி ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கல்வியைப் பற்றி பரிபூரணமான அறிவைக் கொண்ட கல்வி அமைச்சரும், அதைப்பற்றி அடிக்கடி பேசுகின்ற முதலமைச்சரும் இருக்கின்ற கிழக்கு மாகாணம் கல்வியில் கடைசி மாகாணமாக உள்ளது.

கிழக்கு மாகாண கல்வி மிகவும் மோசமாக போய் உள்ளது என்ற குற்றச்சாட்டை நாட்டின் ஜனாதிபதி பகிரங்கமாக முன்வைத்தார். அதனோடு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், முதலமைச்சர் இந்த பணியை செய்ய வேண்டும்.  எனது அரசியல் இலக்கானது கல்வியை மையப்படுத்தியதாகவே உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் கல்வி சிறக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள். இதைப்பற்றி பிரேரணை செய்கின்றவர்கள்.

சிறுபான்மை சமூகத்தை பொறுத்த வரையில் கல்வியில் மாத்திரம் தான் முன்னின்று செயற்பட வேண்டும். தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகமும் நாட்டிலே ஓரளவுக்கு தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் கல்வியொடு சம்பந்தப்பட்டவையாக இருக்கும்.

இதிலே எங்களை யாரும் நசுக்கவோ புறம் தள்ளவோ முடியாது. வியாபாரமாக இருக்கலாம் அல்லது வேறு நிலையமாக இருந்தால் கூட சதிவலைகளை செய்யக் கூடிய சந்தர்ப்பம் அதிகமாக இருக்கின்ற பொழுது கல்வி ரீதியான விடயத்தில் எங்களுக்கு யாரும் எதைனையும் செய்ய முடியாது. எல்லோரும் கல்வி ரீதியான மாற்றத்திற்கு மாற வேண்டும் என்று உரையாற்றினார்.

Related posts: