அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச காப்புறுதி!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்ட காப்புறுதி திட்டத்தை அனைத்து மதங்களைச் சார்ந்த அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் அபிவிருத்தியின் மூலமாக நல்லாட்சி அரசாங்கம் செயற்படும் என அவர் குறிப்பிட்டார். அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சுரக் ஷா இலவச காப்புறுதி வழங்கும் தேசிய நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளுக்கு வீதிக் கடவைக் குறியீடுகள் வரையும் பணிகள் விரை...
வீதியோரம் குப்பை கொட்டினால் நடவடிக்கை வவுனியா நகரசபை செயலாளர் அறிவுறுத்து!
பிரிகேடியர் பிரியந்த பெர்னாண்டோ சீனாவுக்குப் பயணம்!
|
|