அரிசியை மேலும் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்!
Friday, March 3rd, 2017
சந்தையில் உள்ள அரிசியின் அளவு பற்றாக்குறையாக இருப்பதால் கூடுதலாக அரிசியை இறக்குமதி செய்வதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனால் கூட்டுறவு மொத்த விற்பனவு நிறுவனத்தின் மூலம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. மாதம் தோறும் 20 ஆயிரம் மெற்றிக் தொன் என்ற ரீதியில் கட்டம் கட்டமாக அரிசியை இறக்குமதி செய்து சதொச கிளைகள் ஊடாகவும் பகிரங்க சந்தையிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அரசாங்கம் ஏற்கனவே ஒரு இலட்சத்து 13 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளது.

Related posts:
ஆணைக்குழுக்களின் செயற்பாடு தொடர்பில் சபாநாயகர் விளக்கம்!
தேர்தல் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு வன்னி பிரதேசவாசிகளுக்கு கால அவகாசம் - தேர்தல் ஆணைக்குழு ...
அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி - அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ்...
|
|
|


