அரச பேருந்தின் மீது கல்வீசித் தாக்குதல்:ஒருவர் படுகாயம்!
Saturday, November 24th, 2018
கொடிகாமம், எழுதுமட்டுவாழ் பகுதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபைப் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
நேற்று இரவு 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு!
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச - அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இடையே உரையாடல்!
சினோபோர்ம் தடுப்பூசிக்காக செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் - இராஜாங...
|
|
|


