இலவசக் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

Monday, January 9th, 2017

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் காரைநகர், பண்டதரிப்பு ஆகிய தொழில்பயிற்சி நிலையங்கள் ஊடாக கற்கைநெறிகள் சில இலவசமாக ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி காரைநகர் தொழில்பயிற்சி நிலையத்தினூடாக காய்ச்சி இணைப்பவர் (வெல்டிங்), மரவேலை தொழில்நுட்பவியலாளர், கட்டட நிர்மாண உதவியாளர், மின்னிணைப்பாளர், உணவு மற்றும் குளிர்பானம் பரிமாறுபவர், அறை ஊழியர், அலுமினியம் பொருத்துநர், மோட்டார் சைக்கிள் திருத்துநர் ஆகிய கற்கை நெறிகளும் பண்டத்தரிப்பு தொழில் பயிற்சி நிலையத்தினூடாக வீட்டு மின்னிணைப்பாளர், நீர்க்குழாய், பொருத்துநர் விவசாய இயந்திர உபகரணங்கள் திருத்துநர் ஆகிய கற்கை நெறிகள் அனைத்தும் தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழுக்கான பயற்சிகளாகும்.

இக்கற்கை நெறிகளை கற்க விரும்புவோர் தங்கள் பதிவுகளை அலுவலக நேரத்தில் 1ஆம் மாடி, வீரசிங்க மண்டபம் இல.12 கே.கே.எஸ். வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியிலுள்ள மாவட்ட அலுவலகத்திலோ அல்லது பண்டதரிப்பு மற்றும் காரைநகர் நிலையங்களிலோ மேற்கொள்ள முடியும். அத்துடன் பண்டதரிப்பு தொழில் பயிற்சி நிலையத்தில் கற்க விரும்புவோர் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் கரைநகர் தொழில் பயிற்சி நிலையத்தில் கற்க விரும்புவோர் நாளை மறுதினம் புதன்கிழமைக்கு முன்னரும் பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமென மேற்படி அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் கு.நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

images

Related posts: