அரச நிறுவனங்களில் தலைவர்களை நியமிப்பது குறித்த இறுதி கலந்துரையாடல் இன்று!
Wednesday, January 16th, 2019
அரச நிறுவனங்களில் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு, தலைவர்களை நியமிப்பது குறித்த இறுதி கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட குழுவிற்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலின் பின்னர் அரச நிறுவனங்களின் தலைவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை அடுத்து, அமைச்சுக்களின் கீழ்வரும் அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிப்பதில் தற்போது வரை இழுபறிநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசுக்கு எச்சரிக்கை: மூன்று நாள் மட்டுமே!
முல்லைத்தீவில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!
இலங்கை கடவுச்சீட்டின் தரம் உயர்வு!
|
|
|


