அரச சேவை ஓய்வூதிய நிதியத்தில் 3000 பேர் அங்கத்துவம்!

மட்டக்களப்பில் சுமார் 6,571 பேர் ஓய்வூதியம் பெறுகின்றபோதிலும், அவர்களில் 3,000 பேர் மாத்திரமே அரசாங்க சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளனர் என நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைச் செயலாளர் பி.எம்.அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
மேற்படி நிதியத்தின் பொதுச் சபைக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,
‘மட்டக்களப்பில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அரசாங்க சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியக்கிளைகள் இருக்கின்றன. பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த நிதியக் கிளைகள் இருப்பது போன்று, மாவட்ட மட்டத்திலும் அதன் மாவட்டக் கிளை இருக்கின்றது. தற்போது ஓய்வூதியம் பெறுவோருக்கு 15 இலட்சம் ரூபாய் வரையில் வங்கிகள் கடன் வழங்குகின்றன. இந்த நிதியத்தில் இதுவரையில் அங்கத்தர்களாக இணையாதவர்கள், அங்கத்தவர்களாக இணைய வேண்டும்’ என்றார்.
Related posts:
|
|