அரசியலமைப்புத் திருத்தம்: மக்களது கருத்துக்களை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம்!
Sunday, December 11th, 2016
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை சமர்ப்பிப்பதற்கு மேலும் சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் ஆறு உபகுழுக்களினூடாக சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மக்களின் கருத்துக்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தரியும் குழுவின் தலைவர் லால் விஜயநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கை மும்மொழிகளிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அந்த அறிக்கையினை www.constitutional assembly . lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக் கொள்ளமுடியும்.

Related posts:
பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 200 உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்களின் நேரக் கட்டுப்பாடு தள...
பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத...
|
|
|


