அம்பேவலயில் அதிநவீன தொழில்நுட்பத்துடனான பால் பண்ணை!

இலங்கையில் அதி நவீன தொழில்நுட்பத்துடனான பால் பண்ணை அமைக்கப்படவுள்ளது. இந்த செயற்றிட்டத்தை அம்பேவலயில் அமைப்பதற்கு சுவிஸ்லாந்து முதலீட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 90 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு இந்த முதலீடு குறித்து திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதனை செயற்படுத்த முடியாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அம்பேவலயில் 200 ஏக்கர் நிலம் இதற்காக இனம் காணப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால், பிரதேசவாசிகள் பெரும் நன்மை பெறுவர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
காலி ETF பிராந்திய அலுவலகம் இடம்மாற்றம்!
29 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கையில்!
வீட்டிலிருந்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம்: சுகாதார அமைச்சினால் அறிவுரை கோவை வெளியீடு!
|
|