அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் – நெதர்லாந்து தூதுவர் இடையே விசேட சந்திப்பு!
Friday, August 27th, 2021
சட்ட அமைப்பு, கட்டிடக்கலை, உணவு, கலாசாரம், வாழ்க்கை முறை மற்றும் இலங்கையின் சமூக அரசியல் அமைப்பின் பல்வேறு அம்சங்களில் இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையேயான நீண்ட மற்றும் பயனுள்ள உறவு தாக்கம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிவித்துள்ளார்.
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தஞ்சா கோங்க்ரிஜ்ப் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பிலுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது சம்பந்தமாக அமைச்சர் இலங்கைச் சட்ட அமைப்பின் பரிணாம வளர்ச்சிக்குப் பங்களித்த ரோமன் டச்சு சட்டத்தின் பாரம்பரியத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
சமகால உறவுகள் தொடர்பாக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் நெதர்லாந்துடனான ஒத்துழைப்புப் பகுதிகளை வலுப்படுத்துவதற்கும், இணைப்பு மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் பலதரப்புக் கூட்டங்களில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குமான இலங்கை அரசாங்கத்தின் வலுவான தீர்மானத்தை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


