அமெரிக்கா – இலங்கை ஒத்துழைப்பு அறிக்கை!

Tuesday, November 7th, 2017

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசத்திற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இடம்பெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையிலான ஜனநாயகம் சட்டவிதிகள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பை தொடர்ந்தும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பு குறித்து அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் தொடர்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான தொடர்ச்சியான கலந்துரையாடல் மற்றும் அடிப்படையான விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Related posts: