அமரர் சிறிலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

அமரர் செபஸ்ரியன் சிறிலின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆரம்ப கால ஆதரவாளரான அமரர் சிறில் கடந்த 26 ஆம் திகதி காலமானார். அமரரது பூதவுடல் நாரந்தனை – ஊர்காவற்றுறையில் உள்ள அன்னாரது இல்லத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் அன்னாரது இல்லத்திற்கு சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா.வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
Related posts:
அரச வைத்தியர்களின் பெற்றோர் வீதியில் இறங்கி போராட்டம்!
வடமராட்சியில் புலனாய்வுப்பிரிவினர் விசாரணை..!
2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு!
|
|
விரைவில் மாகாணசபை தேர்தல் - ஆளும் தரப்பு கட்சிகளின் தலைவர்களுடன் அவசர சந்திப்புக்கு ஜனாதிபதி ஏற்பாடு...
எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்த திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை...
சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் 11 பாரிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்ற...