அனைவருக்கும் வீட்டு – ஜனாதிபதி!

Sunday, September 10th, 2017

இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வீட்டுக்கான உரிமை பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தெரிவித்துள்ளார்.

திம்புலாகலை மீவத்புர சதரெஸ்கம மாதிரிக் கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘செமட செவன’ என்ற தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 40வது மாதிரிக் கிராமம் சதரெஸ்கம மாதிரிக் கிராமமாகும்.இது பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 4வது கிராம். நாடெங்கிலும் 454 கிராமங்களின் நிர்மாணப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

நினைவு படிகத்தை திரைநீக்கம் செய்து 34 வீடுகளைக் கொண்ட சதரெஸ்கம மாதிரிக் கிராமத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி, முதலாவது வீட்டு உரிமையாளருக்கான வீட்டையம் வழங்கினார்.நாடாவை வெட்டி வீட்டைத் திறந்துவைத்த ஜனாதிபதி அந்த குடும்ப உறுப்பினர்களுடன் சுமுகமாக கலந்துரையாடினார்.

இந்த வீட்டுத் திட்டத்துடன் இணைந்ததாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் வீட்டு உரிமையாளர்களிடம் வீடுகளின் திறப்புகளை ஜனாதிபதி வழங்கினார்.

சதரெஸ்கம மாதிரிக் கிராமத்தின் நினைவு தின வெளியீடு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.2016 வீட்டுத் தேவைகள் குறித்த ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுடன் இணைந்ததாக வீட்டுக் கடன், சில்ப சவியவின் கீழ் பயிற்சிபெறும் பயிலுனர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்குதல், மூக்குக் கண்ணாடி வழங்குதல், சிறந்த வீட்டுத் தோட்டங்களுக்கான பரிசில்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

வெலிகந்த மற்றும் திம்புலாகலை பிரதேச செயலாளர் பிரிவுகளில்  வீடொன்றை நிர்மாணித்துக்கொள்வதற்கு காணிகள் இல்லாத 1850 குடும்பங்களுக்கு அடுத்த ஜனவரி மாதமளவில் காணிகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான காணிகளை அடையாளம் காணுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Related posts: