அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக உயர்வு!

நாட்டில் அரசி, தேங்காய் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதுடன் மீன் வகைகளின் விலைகளும் என்றுமில்லாதவாறு சடுதியாக உயர்வடைந்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத காரணத்தினால், மீன்களன் விலைகள் உயர்வடைந்துள்ளதாக படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரிய வகை மீன்கள் கிலோ ஒன்று 1100 முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் நுகர்வோர் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தேங்காயின் விலையும் உயர்வடைந்துள்ளது.தேங்காயின் விலை 60 மற்றும் 65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அரசியின் விலையும் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.அரிசி விலையை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|