அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனையிலிருந்து விலகவுள்ளோம்  – முகவர் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!

Wednesday, January 18th, 2017

தேசிய லொத்தர் சபையின் தலைவி ஷியாமலா பெரேராவுக்கும், அதிஷ்ட லாபச் சீட்டு முகவர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு தோல்வியடைந்தமையால் அதிஷ்ட லாபச் சீட்டுக்களை விற்பனை செய்வதிலிருந்து முழுமையாக விலகவுள்ளதாக அதிஷ்ட லாபச் சீட்டு முகவர் சங்கத்தின் தலைவர் கிரிஷாந்த மாரபே தெரிவித்துள்ளார்.

30ரூபாவாக அதிகரிக்கப்பட்ட அதிஷ்ட லாபச் சீட்டின் விலையை 20 ரூபாவாக குறைக்குமாறு வலியுறுத்தினோம். இது தொடர்பில் பேச்சு நடத்தினோம். எனினும் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு, ஆகக் குறைந்தது அக்கோரிக்கையை பரிசீலனைக்குட்படுத்த தலைவி இணங்கவில்லை. ஆகையால் அதிஷ்ட லாபச் சீட்டுக்களை கொள்வனவு செய்து விற்பனை செய்வதிலிருந்து முழுமையாக விலகி நிற்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

அதிஷ்ட லாபச் சீட்டின் விலை 20ரூபாவிலிருந்து 30ரூபா வரை, 10ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமையால், அதிஷ்ட லாபச் சீட்டின் விற்பனை 40 சதவீதத்தினால் குறைந்துள்ளது என்றும் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

6422829877_63a397e0ca_o-720x450

Related posts: