அதிவேக வீதிகளுக்கு அதிரடி படையினர் பாதுகாப்பு!
Tuesday, April 11th, 2017
அதிவேக வீதிகளில் பாதுகப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை ஈடுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுவருடத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிவேக வீதியில் பயணிப்பதற்கு முன்னர் தங்கள் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அதிவேக வீதி பராரமரிப்பு முகாமையாளர் சமன் ஓப்பநாயக்க சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகள் ஏதாவது ஒரு தகவல் வழங்குவதற்கு அவசியம் என்றால் அதற்காக வீதியின் இரண்டு பக்கங்களிலும் உள்ள இலத்திரனியில் பலகைகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கைதிகள் படுத்துறங்க மெத்தைகள்!
சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்ப...
வடக்கில் அதிபர் தரம் 1 ஐ சேர்ந்தவ அதிபர்கள் பற்றாக்குறை - 129 பேரே கடமையில் - 21 தரம் 1 அதிபர்கள் கோ...
|
|
|


