அதிவேக நெடுஞ்சாலையில் 97 ஆயிரம் வாகனங்கள் பயணிப்பு-பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க!

தமிழ் சிங்கள புத்தாண்டை அண்மிக்கும் காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் நேற்றையதினம் பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் பயணித்துள்ளன.
கடந்த சில தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் மிகக் கூடுதலான வாகனங்கள் பயணித்துள்ளதாகவும் கடந்த ஞாயிரன்று மட்டும் 97 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன என்று அதிவேக நெடுஞ்சாலை செயற்பாட்டு மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்யைதினம் சீமெந்து பொதிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்த்தி ஒன்று விபத்துக்குள்ளாதில் ஏற்பட்ட சேதத்தொகை 15 தொடக்கம் 20 இலட்சம் ரூபா தண்டப்பணம் பாரவூர்த்தி உரிமையாளரிமிருந்து அறிவிடப்பட்டது. அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் இடையில் நிறுத்தப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் ஏனைய வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில் வாகன நிறுத்தப்பட்டோ அல்லது விபத்திற்கு உள்ளாகியிருந்தால் அதனால் அரசாங்கத்திற்கு ஏற்படும் நட்டத்தொகையை வாகன உரிமையாளரிமிருந்து அறவிடப்படும் என்றும் கூறினார்.
Related posts:
|
|