அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் முடிவு!
Friday, April 29th, 2016
உள்ளூராட்சி சபை தேர்தலை ஒத்திவைத்தமை தொடர்பாக உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 18 பேர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதன் போது, எல்லை நிர்ணயம் இன்னும் நிறைவு செய்யப்படாமை காரணமாக இந்த தேர்தலை ஒத்திவைத்ததாக அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தலை ஒத்திவைத்தன் காரணமாக ஜனநாயக உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இந்த வழக்கை மீண்டும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ள உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
Related posts:
கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த புதிய ஒப்பந்தம்!
நாட்டிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட மத போதகர்கள் நாடு கடத்தல்!
பணியில் இருந்து நீக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் - பாதுகாப்பு அமைச்சர் அதிரடி நடவடிக்கை!
|
|
|


