நலன்புரி கொடுப்பனவுகள் அடுத்த மாதம் வழங்க நடவடிக்கை – 37 இலட்சம் விண்ணப்பங்களில் 22 இலட்சம் விண்ணப்பங்கள் தெரிவு என துறைசார் அமைச்சு அறிவிப்பு!

Saturday, May 13th, 2023

குறைந்த வருமானம் கொண்ட 22 இலட்சம் குடும்பங்களுக்கு அரசாங்கம் அடுத்த மாதம் முதல் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க தீர்மானித்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்துக்காக கிடைக்கப் பெற்றுள்ள 37 இலட்சம் விண்ணப்பங்களில் 33 இலட்சம் விண்ணப்பங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு முழுமையான தரப்படுத்தலுக்கமைய, 22 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் எந்தவொரு வங்கியூடாகவும் அவர்களது வைப்புக் கணக்குகள் மூலம் அதனை பெற்றுக்கொள்ள முடியுமெனவும், இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்’ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ‘அஷ்வசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. நிவாரணம் பெறத் தகுதியுள்ளவர்கள், அரசியல் நோக்கங்கள் காரணமாக நீக்கப்படுவதும் தகுதியற்றவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவது தொடர்பிலேயே அந்த அதிருப்தி காணப்படுகிறது. சர்வதேச மட்டத்திலும் ஒரு குற்றச்சாட்டாக இது முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் போது, பிரதான விடயமாக சுட்டிக்காட்டப்பட்டது.

000

Related posts: