அச்சுவேலி தபால் நிலையம் புதிய இடத்தில்!
Tuesday, October 11th, 2016
அச்சுவேலி தபால் நிலையம் அச்சுவேலி பழைய கொழும்பு ஸ்ரூடியோ ஒழுங்கையில் உள்ள கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அச்சுவேலி தபால் நிலையம் இதுவரை காலமும் பருத்தித்துறை பிரதான வீதி இலுப்பையடிச் சந்திக்கு அருகில் உள்ள கட்டடத்தில் செயற்பட்டது.
கடந்த வாரம் தொடக்கம் பழைய கொழும்பு ஸ்ரூடியோ ஒழுங்கை லிபெட்டி சினிமாவுக்கு முன்பாகவுள்ள ஒழுங்கையிலுள்ள கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அச்சுவேலி தபால் நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு பொதுமக்களின் நிதி உதவியுடன் 10 வருடத்துக்கு முன்னர் கொள்வனவு செய்து அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட காணி வெறுமென உள்ளது. தபால் நிலையம் வாடகைக் கட்டடத்தில் இடத்திற்கு இடம் மாறிக்கொண்டிருக்கின்றது. தற்போது செயற்படும் இடம் 4ஆவது இடமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related posts:
காலநிலையில் திடீர் மாற்றம்!
வாராந்தம் மூன்று இலட்சம் லீற்றர் ஒட்சிசன் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள தயாரிக்கப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அனுமதி!
|
|
|


