அக்கரைப்பற்று விபத்தில் இருவர் பலி!
Tuesday, April 18th, 2017
இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று சாலைக்கு அருகாமை யில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒலுவில் பிரதேசத்தினைச் சேர்ந்த 43 வயதுடைய கண்ணன் அப்துல் சலாம் என்பவரும் 24 வயதுடைய அக்கீப் அப்துல் றசீஸ் என்பவருமே விபத்தில் உயிரிழந்தவர்களாவர். பொத்துவில் பிரதேசத்திலிருந்து தமது வதிவிடமான ஒலுவில் பிரதேசத்தினை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த வேளையில் பிரதான வீதியின் வளைவில் கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் எதிரே இருந்த மதிற் சுவரில் மோதுண்டதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்த கண்ணன் அப்துல் சலாம் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து வந்த அக்கீப் அப்துல் றசீஸ் என்பவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிசிச்சை பெற்று வந்த வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
|
|
|


