சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரச பயங்கரவாதம் அல்ல – அமைச்சபிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Friday, September 9th, 2022

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது அது எவ்வாறு அரச பயங்கரவாதமாக முடியுமென ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் இடம்பெற்றுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டுமென்பதை குறிப்பிட்ட அமைச்சர், அதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட முற்படுவது பயங்கரவாதமாகாது. தமிதா அபேரத்ன விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருக்கின்றார். அவருக்கு அநீதி ஏற்பட்டிருந்தால் அதற்கு எதிராக சட்டத்தின் முன் செல்ல முடியும். மனித உரிமை ஆணைக் குழுவிலும் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்.

அதேவேளை, மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்ட இடமளிக்க வேண்டும். அதற்காக ஜனாதிபதி வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தி வருகின்றார். அதற்கு அனைவரும் ஆதரவளிப்பதன் மூலமே நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும்.

இதேவேளை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்போது அது எவ்வாறு அரச பயங்கரவாதமாகும் எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

அதனால் சட்டத்தை செயற்படுத்தும் போது யாருக்காவது அதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எதிராக அவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு செல்ல முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: