அகில இலங்கை ரீதியில் தமிழ் மாணவன் சாதனை!
Wednesday, December 5th, 2018
அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.
கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கர்நாடக சங்கீதப் போட்டியில் தனி இசையில் பங்குபற்றி மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவன் அருள்ஞானப்பிரகாசம் மேசாக்பிரசாத் முதல் இடத்தினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாடசாலை சமூகம் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Related posts:
தீக்காயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி
மத்திய வங்கி ஆளுநர் பிரச்சினையில் இணக்கப்பாடு!
காங்கேசன்துறை – புதுச்சேரி இடையில் விரைவில் கப்பல் சேவை - மத்தள விமான நிலைய வானூர்தி நிலையத்தினூட...
|
|
|


