SLIC நிறுவனத்தினால் நீண்ட நாள் பழுதடையாத செமன் பக்கற் அறிமுகம் !

Friday, June 21st, 2024

இலங்கையில் முதல் தடவையாக தேசிய ரின்மீன் உற்பத்தி நிறுவனமான SLIC நிறுவனத்தினால் தனது நவீன தயாரிப்பான நீண்ட நாள்களுக்கு பழுதடையாமல் பாதுகாக்கக் கூடிய ஒருகிலோ எடை கொண்ட ஜக் மேக்கரல் செமன் பக்கற் ஒன்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று (21.06.2024) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

SLIC நிறுவனத்தின முகாமைத்துவப் பணிப்பாளரான கலாநிதி கபில பாலசூரியவினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் வோனந்தாவிடம் சம்பிரததாயபூர்வமாக இந்த செமன் பக்கற் கைளிக்கப்பட்டதுடன் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு உகந்த வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளதாக பாலசூரிய அமைச்சரிடம் தெரிவித்தார்.

இதன் போது அமைச்சர் தெரிவிக்கையில், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கமெனவும் அதற்காக அனைத்து உதவிகளையும் அரசாங்கம்  தேசிய உற்பத்தியாளர்களுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் இதற்கு SLS (இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்) சான்றிதழை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.

இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நிசாந்த விக்கிரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

000

Related posts:


வடக்கிற்கென தனியான வங்கி ஒன்றை நிறுவி மக்களுக்கு உதவவேண்டும் -  யாழ்.வர்த்தகர் சந்திப்பில் டக்ளஸ் தே...
யாழ். போதனா வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய மகப்பேற்று கட்டிடத்தொகுதி அமைப்பட வேண்டும்!
கடற்றொழில் கூட்டுத்தாபனம் மற்றும் நக்டா ஆகியவற்றுக்கான புதிய நியமனங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் ...