4ஆம் தரம் முதல் பாடசாலை பாடவிதானத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பான பாடம் -டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சிக்கு வெற்றி!

Tuesday, March 28th, 2017

4ஆம் தரத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு இயற்கை அனர்த்தம் தொடர்பான விடயங்களடங்கிய பாடத் திட்டத்தினை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவாக எதிர்வரும் 2019ஆம் ஆண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்படுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

1993ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் எமது நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 36,026 பேர் உயிரிழந்துள்ளனர். 63,18,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2006 – 2015 காலப்பகுதிக்குள் 803 பேர் உயிரிழந்தும், 97,25,904 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். அதே நேரம் எமது நாட்டில் நீரில் மூழ்கி ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையானது வருடத்தில் 1500க்கும் அதிகமாகும் என்று தெரிய வருகிறது. வீதி விபத்துகள் காரணமாக வருடத்திற்கு சுமார் 3000க்கும் அதிகமானோர் இறக்கின்றனர். அதற்கு சமமானளவு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் பாடசாலை மட்டத்திலிருந்து விழிப்புணர்வு பாடத் திட்டங்கள் தேவை என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு செவிமடுத்துள்ள கல்வி அமைச்சு, 3ஆம் தரத்திலிருந்தும் இது தொடர்பில் அடுத்த ஆண்டு முதல் பாடத்திட்டங்களை உள்வாங்குவதற்கும், 2019ஆம் ஆண்டு முதல் 4ஆம் தரத்திலிருந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

கிடைக்கப்பெறுகின்ற வளங்களைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் - முல்லைத்தீவில் டக்ளஸ் தே...
ஓஷன்பிக் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடக்கில் நீர்வேளாண்மை அபிவிருத்தி - அமைச்சர் டக்ளஸ் தல...
யாழ். - பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை: அமைச்சர் டக்ளசின் முயற்சிக்கு அமைச்சரவை பச்சைக் கொட...

மொழி அமுலாக்கலில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டும் - ஆழ்கடல் மீன்பிடியாளர்கள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!
கற்பிட்டிப் பிரதேசத்தில் இழுவைமடி தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்...