சரியான தமிழ் அரசில் தலைவராக டக்ளஸ் தேவானந்தாவை ஏற்றுக்கொண்டுள்ளோம் – மகிழ்ச்சியில் கிழக்கு மக்கள் !

Tuesday, October 31st, 2017

இடர்பட்டு துயர்பட்டு நாளும் பொழுதும் நாம் அவலப்பட்டபோது எமக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தேர்தல்களில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று எம்மை நட்டாற்றில் விட்டுள்ளனர் என மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டில் கொடும் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக தமிழர்களாகிய நாம் நளாந்தம் அவலச் சாவுகளுடனும் அழிவுகளுடனும் அச்சத்துடன் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோம்.

அப்பொழுதில் இருந்து யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட நாம் அமைதியான வாழ்க்கையையே வாழ விரும்புகின்றோம்.

எமது சொந்தங்கள் பலர் இன்றும்சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகளாக சிறைக்குள்ளேயே தமது பொழுதுகளைக் கழித்துவருகின்றனர் இதுமட்டுமன்றி எமது உறவுகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டோராகவும் இருக்கும் நிலையில் உறவுகளும் கண்ணீரும் கம்பலையுமாய் நாளாந்தப் பொழுதுகளை கழித்துவருகின்றோம்.

அதுமாத்திரமன்று நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தரக்கூடியதான வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்கள் நலன்களிலேயே அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றார்களே ஒழிய எமக்காக அவர்கள் ஒருபோதும் குரல்கொடுக்கமாட்டார்கள் என்பதை நாம் அனுபவங்களினூடாக கற்றுக்கொண்டுள்ளோம்.

ஆதலால்தான் எமது வாழ்வுக்கு ஒளிகொடுக்கும் நட்சத்திரமாக நாம் டக்ளஸ்தேவானந்தாவை எமக்கான அரசியல் தலைமையாக ஏற்றுக்கொண்டு அவருக்கு எமது முழுமையான ஆதரவுகளை வழங்க முன்வந்துள்ளோம் எனவும் மக்கள் ஆர்வத்துடன் தெரிவித்திருந்தனர்.

Related posts: