புதிய ஆட்சியில் தீவகத்தை தொழில் துறையால் கட்டியெழுப்புவேன் – வேலணையில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

வரவுள்ள ஆட்சி மாற்றத்தில் நாம் பங்காளிகளாக இருப்பதன் மூலம் இப்பகுதி மட்டுமல்லாது தமிழ் இளைஞர் யுவதிகள் அதிகமானோரது தொழில்வாய்ப்பு பிரச்சினைக்கு மட்டுமல்லாது அனைத்து பிரச்சினைகளுக்கும் கூடியளவான தீர்வு பெற்றுத்தருவேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச ஆலோசனை சபை உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள் செயற்பாட்டாளர்கள் கூட்டம் கட்சியின் வேலணை பிரதேச அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த காலத்தில் நாம் இப்பகுதியில் பல அபிவிருத்தி மற்றும் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றோம். மேலும் பல அபிவிருத்திகளையும் தொழில் வாய்ப்புக்களையும் இப்பகுதியில் உறுவாக்க பல செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தோம். ஆனாலும் ஆட்சி மாற்றம் பெற்றதால் அவற்றை எம்மால் முழுமையாக செய்துமுடிக்க முடியாமல் போனது. இதனால் எமது இளைஞர் யுவதிகள் தமது தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிட்டது.
ஆனாலும் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்வோமானால் இப்பகுதியில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல தொழில் வாய்ப்புக்களை எம்மால் உருவாக்கித்தர முடியும் என்றார்.
Related posts:
|
|