பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் விவகாரம்: டக்ளஸ் எம்.பி.யின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு – உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம்!

Friday, September 20th, 2019


பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர் விநியோக மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற அமர்வின் போது வாய்மூலம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அனைத்துப் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களது கோரிக்கைகள் தொடர்பில் உயர் கல்வி அமைச்சு தற்போது என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளது? என்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் அல்லாத ஏனைய பணிகளுக்கென வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 400க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன? எனவும் கேள்வி எழுப்பியதுடன் தனது குறித்த கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம்  வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போதே அமைச்சர் டக்ளஸ் எம்.பி.யிடம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தேசிய நல்லிணக்கத்தை தமிழ் மக்களின் உணர்வுகளிலிருந்து கட்டியெழுப்ப கல்வி அமைச்சின் பங்கும் அவசியம் – ...
சந்தர்ப்பங்களை ஆக்கபூர்வமானதாக உருவாக்குவதே எமது நோக்கம் - கிளிநொச்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
யாழில் நவீன நண்டு கடலுணவு பதனிடும் தொழிற்சாலை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

கைப்பணித்துறை மேம்பாட்டின் வளர்ச்சிக்காக என்றும் நாம் கரம்கொடுப்போம் - டக்ளஸ் தேவானந்தா!
மகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு...
நீர் வேளாண்மையை மேம்படுத்தும் மாபெரும் கருத்திட்டம் வடமராட்சி மண்டான் களப்பு பகுதியில் அமைச்சர் டக்ள...