தமிழ் மக்களுக்கு விரோதமாக அரசு செயற்பட்டால் அமைச்சர் டக்ளஸ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!
 Thursday, January 16th, 2020
        
                    Thursday, January 16th, 2020
            
எமது அரசு தமிழ் மக்களுக்கு விரோதமாகவோ அவர்களின் அபிலாசைகளுக்கு மாறாகவோ செயற்படப் போவதில்லை. நாம் தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படுவோமாக இருந்தால் எமது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பாக வெளியாகும் செய்தி தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் அவர்கள் இது பல கட்சிகள் சேர்ந்ததாக அமைந்த அரசாங்கம் என்பதனால் பலவிதமான கருத்துக்கள் வெளிப்படுத்தப் படுகின்ற போதிலும் அது பொது முடிவாக அமையாது. எனினும் அனைவரும் அரசின் பொது முடிவிற்கு கட்டுப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் ஊடகங்கள் பிரச்சினைகளை பெரிதுபடுத்தி தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பிர்ச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை மட்டுமல்லாது அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதற்கான கோரிக்கைகளை நாளாந்தம் எமக்கு வலியுறுத்தி வருகின்றார்.
அவரின் கோரிக்கைளுக்கும் நாம் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்போம் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        